`மணல் லாரிகளை எப்படி மடக்கலாம்?’ - ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வந்த தொடர் போன்கால்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கும் கூவம் ஆறு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பகுதியில் உள்ள சிவபுரம், ஊழமங்களம் உள்ளிட்ட வழியாகச் செல்கிறது. அந்தப் பகுதியில் இருந்து அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான மணல் லாரிகள்மூலம் கடந்த சில வருடங்களாக அனுமதி இல்லாமல் மணல் எடுத்துச்செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. 

மணல் கொள்ளை

இந்த நிலையில், புதிதாக வந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ.எஸ்.பி., ராஜேஷ் கண்ணாவிடம் லாரிகளில் மணல் கடத்தல் செய்வதுகுறித்து சிலர் சொல்லியிருக்கிறார்கள். உடனே, தனது டீமை அழைத்துக்கொண்டு பேரம்பாக்கம் - தண்டலம் சாலையில் உள்ள வளர்புரம் என்ற இடத்தில் காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த  7 மணல் லாரிகளை மடக்கிப்பிடித்தார். லாரியில் வந்தவர்களிடம் மணல் ஏற்றிச் செல்வதற்கான எந்த ரசீதும் இல்லை. சவுடு மண் ஏற்றிச் செல்வதற்கான ரசீது இருப்பதாகச் சொல்லி, புதிதாக ரசீதைத் தயார்செய்து கொண்டுவந்தார்கள்.

பிடிபட்ட மணல் லாரிகளை காவல் நிலையத்துக்குக் கொண்டுவந்ததும், ஏ.எஸ்.பி.,ராஜேஷ் கண்ணாவுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து செல்போனில் அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. விரக்தியான அந்த அதிகாரி, என்ன நடவடிக்கை எடுப்பீர்களோ அதைச் செய்யுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அந்த 7 லாரிகளுக்கும் அபராதம் விதித்து அனுப்பிவிட காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!