வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (20/07/2018)

கடைசி தொடர்பு:12:40 (20/07/2018)

காதல் மனைவி பிரிந்த சோகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட ஜிம் மாஸ்டர்!

சென்னை மேற்குத் தாம்பரம், கன்னடபாளையம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார். 25 வயதான இவர், தென்னிந்திய ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர். மேற்குத் தாம்பரம், பட்டேல் நகர் பகுதியில் சொந்தமாக உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை நடத்திவந்தார்.

அசோக்குமார்

சில வருடங்களுக்கு முன்பு, சரண்யா என்பவரை காதலித்துவந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சரண்யாவுக்கும் அசோக்குமாருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால், ஒரு மாதத்துக்கு முன் சரண்யா அவரைப் பிரிந்து ஊரப்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மனைவியைப் பிரிந்த சோகத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலால், அசோக்குமார் கடந்த ஒரு மாதமாகவே அவதிப்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று, வீட்டில் உள்ள அறையில் அசோக்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். உடல் வலிமையாக இருக்கும் அளவுக்கு மனம் வலிமையாக இல்லை என்பதைக் காட்டுகிறது இந்தத் தற்கொலை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க