ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்களை விடுவிக்க கோரி புதுக்கோட்டையில் சாலை மறியல்!

ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடிகாட்டியதற்காக கைது செய்யப்பட்ட அனைத்துக் கட்சியினரையும் விடுதலை செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்காங்கே சாலை மறியல் நடப்பதால் புதுக்கோட்டையில் பதற்றம் நிலவுகிறது.
 
https://image.vikatan.com/images/2018/07/20/images/IMG-20180720-WA0068_23384.jpg
 
இன்று காலை புதுக்கோட்டை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுக்கோட்டை மாவட்ட  அரசுப்  பணிகளை ஆய்வு செய்தார். 
இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சியை கொள்கைக்கு எதிராக இருப்பதாக பிரதான எதிர்கட்சியான தி.மு.க, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன், அரசு, ஆலங்குடி மெய்யநாதன் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரன், சண்முகம் என  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் சுமார் 550க்கும் மேற்பட்டோர் மட்டும்  கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை நகரில் உள்ள மூன்று திருமண மண்டபங்களில் காலையிலிருந்து அடைக்கப்பட்டுள்ளார்கள். 
 
 
மேலும் ஆளுநர் மாலை 5 மணிவரை புதுக்கோட்டையில் இருந்து கிளம்பி திருச்சிக்கு சென்றுவிட்டார். ஆனால் ஆளுநருக்கு எதிராக போராடியவர்கள் நள்ளிரவு வரை விடுதலை செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு குடிநீர்,  உணவு வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் போராடியவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, நள்ளிரவில் சிறையில் அடைக்க காவல் துறை ஏற்பாடு செய்துவருவதக தகவல் வெளியானதால் புதுக்கோட்டை மாவட்டம் பரபரப்பாக  உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைச் செய்யக்கோரி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்  சாலை மறியல் நடைப்பெற்றது. மேலும் பல  இடங்களில் போராட்டங்கள்  தொடர்வதால் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் கறுப்புக்கொடி போராட்டத்தால்  கைது செய்யபட்டு திமுக ஒன்றிய செயலாளார் வெங்கடாசலத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆளுநர் வருகையை ஒட்டி கைது சம்பவமும், சாலை மறியலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!