வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:05:00 (21/07/2018)

ஊதிய உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!

மிழக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் தரமில்லாத பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சம்பளத்தை உயர்த்தித் தருமாறு வலியுறுத்தியும் ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தினர், இன்று (21-ம் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 

108 ஆம்புலன்ஸ்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை, பொதுமக்களுக்கு சிறந்த பங்களிப்பாய் உள்ளது. இந்தச் சேவையை ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. என்ற தனியார் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் 930 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்றச் சங்க ஊழியர்கள் இன்று (21-ம் தேதி) ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 

இதுகுறித்து அந்தச் சங்க ஊழியர்கள், ``தமிழக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குக் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. ஆகையால், சம்பளத்தை உயர்த்தித் தருமாறு வலியுறுத்தியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் தரமில்லாத பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். அதேநேரத்தில், நோயாளிகளின் நலன் கருதி, அவசர தேவையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவர்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க