தமிழக பள்ளிகளில் அறிமுகமாகிறது ரக்பீ விளையாட்டு போட்டிகள்! | rugby game in tamil nadu

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:06:00 (21/07/2018)

தமிழக பள்ளிகளில் அறிமுகமாகிறது ரக்பீ விளையாட்டு போட்டிகள்!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ரக்பீ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என தமிழ்நாடு ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு சங்கத்தின் தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தெரிவித்துள்ளார்.

ரக்பீ விளையாட்டு

மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு சங்கத்தின் சார்பில் நேசனல் லெவல் ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் ஜூலை 20 முதல் 22 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒரிசா, மகாராஸ்டிரா, கோவா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இருந்து 600 வீரர்கள் பங்கேற்று உள்ளனர், இந்த போட்டி குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு சங்கத்தின் தலைவர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறுகையில் " ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியை 100-க்கும் மேற்பட்ட நாடுகள் விளையாடி வருகின்றன, 88 ஆண்டுகளாக விளையாடப்படும் இந்த ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு போட்டி ஒலிம்பிக் போட்டியிலும் இடம்பெற்று உள்ளது. இந்த ஆண்டு முதல் ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு போட்டி தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாவட்ட அளவில் நடத்தப்படும், இதற்க்காக தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளது, ரக்பீ கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்புகளும் கிடைப்பது குறிப்பிடதக்கது. ரக்பி விளையாட்டை மாணவர்கள் கற்றுக்கொண்டு, சாதித்தால் அது தமிழகத்திற்கு கூடுதல் பெருமைகளை சேர்க்கும்' என அவர்  தெரிவித்தார் .