கல்பாக்கம் அணுஉலை மின்உற்பத்தி எப்போது? - அணுமின் நிலைய இயக்குநர் சத்தியநாராயணா விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அலகு 1 மற்றும் அலகு 2 என இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வோர் அலகும் அதிகபட்சமாக தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டிருக்கிறது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரை ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

சென்னை அணுமின் நிலைய

இந்தநிலையில், கல்பாக்கம் அணு உலை அலகு 1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு அணுஉலை பழுதடைந்தது. அன்றைய தினம் முதல் அணு உலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பல கிலோ மீட்டர் தொலைவு உள்ள குழாயில் எந்தப் பகுதியில் தண்ணீர் வெளியேறுகிறது எனக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். 30 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அணுஉலை பழுது காரணமாகக் கடந்த ஏழுமாதமாகச் செயல்படாததால் அதில் சிக்கல் இருப்பதாகத் தகவல்கள் பரவின. ``கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்டிருந்த அணுக்கதிர் வீச்சு கசிவுக்கான காரணத்தை விஞ்ஞானிகள் அப்போது கண்டறிந்தனர். Delayed Neutron monitoring sensor tube - என்றழைக்கப்படும் குழாயில் கசிவு இருப்பதாகக் கண்டறியப்பட்டு, அது சரிசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதுமட்டுமே கசிவுக்கான காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கல்பாக்கம் அணு உலை ஒருநாள் செயல்படவில்லை என்றால், அதனால் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது” என மருத்துவர் புகழேந்தி கூறியிருந்தார்

இதுகுறித்து சென்னை அணுமின் நிலைய இயக்குநர் சத்தியநாராயணா, ``சென்னை அணுமின் நிலைய அலகு 1-ல் கடந்த 2003ம் ஆண்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, அதில் மூன்று ஆண்டுகள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டோம். அப்போது அலகு-1 புதுப்பிக்கப்பட்டு புதிய அலகாக மாற்றப்பட்டது. இதனால் 30 ஆண்டுகள் பழைமையான அணுஉலை என்று கூறுவதென்பது தவறானது. அலகு 1ல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 குழாய்களில் பழுது ஏற்பட்டது. இந்தக் குழாய்களை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பியுள்ளோம். பாபா அணு ஆராய்ச்சி மையத்திடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க உள்ளோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!