வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (21/07/2018)

கடைசி தொடர்பு:16:26 (21/07/2018)

பள்ளிக்குச் சென்ற மாணவன் கிணற்றில் சடலமாகக் கிடந்த துயரம்!

கடலூர் மாவட்டம், வேப்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த
முருகேசன் என்பவர் மகன் சுசிபாலன் (14) 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 கடலூர்

நேற்று பள்ளிக்கு வந்த சுசிபாலன் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து அந்த மாணவனின் பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு பள்ளிக்கு அருகில்  விவசாய விளைநிலத்தில் உள்ள கிணற்றில் மாணவன் சுசிபாலன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவன் சுசிபாலன்
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில்
இறந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர்களின் கவனக்குறைவின் காரணமாக மாணவன் கிணற்றில்
விழுந்து உயிரிழந்ததாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். 

 கடலூர்

இந்தத் தகவலறிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினிசந்திரா பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.