`ரெய்டு பயம்’ ... அதிமுக-வைச் சாடிய ஸ்டாலின்; கொந்தளித்த தமிழிசை

ரெய்டு பயத்தினால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின்

15 வருடங்களுக்குப் பிறகு மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகள் தோல்வியைத் தழுவின. மக்களவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, அவையில் இருந்த மொத்த உறுப்பினர்கள் 451 பேர். இதில் 126 பேர் மத்திய அரசுக்கு எதிராகவும், 325 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தது. 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ``தன்னுடைய பினாமி வீட்டில் ரெய்டு நடத்தியதில் தானும், தன்னுடைய சம்பந்தியும் மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மத்திய பா.ஜ.க அரசை ஆதரித்தது, தமிழகத்துக்குச் செய்த மன்னிக்க முடியாத துரோகம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், முதுகெலும்பற்ற அ.தி.மு.க அரசு, தமிழகத்துக்குச் துரோகத்தை மட்டும் இழைக்கும் பா.ஜ.க அரசுக்குப் பினாமியாக செயல்படுவது நிரூபணமாகியுள்ளது! அ.தி.மு.கவுடனோ, வேறு எந்த வழியிலோ பா.ஜ.க  தமிழகத்துக்குள் காலூன்றி விடலாம் என நினைத்தால், அதை நிச்சயம் தி.மு.க அனுமதிக்காது!” என மிகவும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் பதிவை விமர்சித்து ட்வீட் செய்துள்ள தமிழிசை `வருமானவரி சோதனைகளுக்காகவே அதிமுகவினர் பாஜக அரசுக்கு ஆதரவு.....ஸ்டாலின்...முன்னர் திமுகவின் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு நிலைப்பாடு வருமான வரி பிரச்னைகளால்தானா?" என்று  குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!