லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி! | Lorry Strike: Free permits for agricultural produce in buses

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (21/07/2018)

லாரி ஸ்டிரைக் எதிரொலி - பேருந்துகளில் விவசாய விளைபொருள்களுக்கு இலவச அனுமதி!

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருள்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச்செல்லலாம் எனத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

லாரி ஸ்ட்ரைக்

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பெட்ரோல் டீசல் விலைகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், விவசாய விளைபொருள்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருள்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச் செல்ல அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தால் விவசாய விளைபொருள்கள் தேக்கமடையாமல் இருப்பதற்காக, அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


[X] Close

[X] Close