வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (21/07/2018)

கடைசி தொடர்பு:21:06 (21/07/2018)

புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள்!

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆவடி அரசு மகளிர் பள்ளி மாணவிகள் சுமார் 2,000 பேர் புலி வடிவத்தில் நின்று சாதனை படைத்தனர்.

மாணவிகள்


சர்வதேசப் புலிகள் தினம் வரும் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை ஆவடியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,000 மாணவிகள் ஒன்று திரண்டு புலி வடிவில் நின்று இந்திய அளவில் சாதனை செய்ய முயன்றனர். இதை, இந்தியன் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் இயக்குநர் செந்தில் அரசு கலந்துகொண்டு பார்வையிட்டார். மாணவிகளின் இம் முயற்சி இந்தியன் வேல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி ராணியிடம் வழங்கப்பட்டது. இதில் அகில, இந்திய மனித சட்ட உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் சாம்சன், தலைமைச் செயலாளர் டேனியல் மற்றும் ஆவடி மகளிர் காவல் ஆய்வாளர் ஷோபா ராணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை ஆசிரியர் ஜான்சி ராணி, ‘சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நமது தேசிய விலங்கான புலிகள் இனம் அழிந்து வருவது கவலையளிக்கிறது. புலிகள் இனத்தைக் காப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தச் சாதனையைச் செய்ததாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.