``லாரி ஸ்டிரைக்கை அரசுகள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!'' - ராமதாஸ்

``லாரி ஸ்டிரைக்கை மத்திய, மாநில அரசுகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'' என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

லாரி ஸ்டிரைக்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயருவதைத் தடுக்க முடியாது. இப்படியாக அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலை நிறுத்தம் நீடிப்பதைவிட, உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவதுதான் சரியானதாகும். எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து லாரி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து முறையான பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு ஓர் தீர்வுகாண வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!