மனவளர்ச்சிக் குன்றிய சிறுமிக்கு சூடு வைத்த காப்பக ஊழியர்கள் கைது!

குமரி மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமிக்கு சூடு வைத்த மனநல காப்பக பணியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆலங்கோட்டில் சி.எஸ்.ஐ. மனநல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தங்கியிருந்த 16 வயது சிறுமி தங்க இசக்கி, சொன்னபடி கேட்கவில்லை எனக் கூறி அங்கு சமையல் பணி செய்த சரோஜா சூடு வைத்திருக்கிறார். உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்களுடன் அழுதுகொண்டிருந்த சிறுமி குறித்து, இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கூறப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தி, உடலில் தீ காயங்களுடன் அழுதுகொண்டிருந்த அந்த சிறுமியை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமிக்கு மூன்று நாள்களுக்கு முன்பே சரோஜா சூடு வைத்திருக்கிறார் என்றும், சரோஜா மற்றும் இந்த சம்பவத்தை மறைத்த வார்டன் பிரியா, காப்பக மேலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக சரோஜா மற்றும் பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!