முதல்வர் திறந்து வைத்த ஒரே வாரத்தில் 2 விபத்து! - கோவை மேம்பால சோகம்

கோவையில், முதல்வர் திறந்து வைத்த பாலம் ஒரு வாரத்துக்குள் இரண்டு விபத்துகளைச் சந்தித்துள்ளது.

போத்தனூர் மேம்பாலம்

இது கோவை மேம்பாலங்களின் சோதனை காலம். காந்திரபும் மேம்பாலம், உக்கடம் மேம்பாலம் என்று  மக்களுக்கு பயனே இல்லாமல் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. இந்நிலையில், கோவை போத்தனூர் – செட்டிபாளையம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.22 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதை கடந்த திங்கள் கிழமை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மக்களின் பயன்பாட்டுக்கு வந்த சில தினங்களிலேயே, தனியார் பேருந்து ஒன்று டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரி ஒன்று பாலத்தின் தூண் மீது மோதியது. இதில் தூண் முழுவதுமாக சேதமடைந்தது.

மேம்பாலம்

பாலத்தில் போடப்பட்டுள்ள சாலையின் தரம் குறைவு, ரவுண்டானா அமைக்காதது போன்றவை விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள டிவைடர் சில மீட்டர் தூரத்துக்குத்தான் அமைக்கப்பட்டது. எனவே, அந்த பாலத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும். டிவைடர் முழுவதுமாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!