மெட்ரோ ரயில் பாதையில் பழுது.! ஒரு மணி நேரம் சேவை நிறுத்தம்; பயணிகள் அவதி

கோயம்பேடு முதல் சென்டரல் செல்லும் மெட்ரோ ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டது. 

சென்னை மெட்ரோ

சென்னையில் கடந்த சில வருடங்களாக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டுவருகிறது. சென்னை டி.எம்.எஸ் முதல் விமான நிலையம் வரையிலும், மற்றொரு பாதை, விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வழியாக ஒரு பாதையும் செயல்பட்டுவருகிறது. இதில் கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் செல்லும் பாதையில், திருமங்கலத்திலிருந்து பூமிக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை ஆறு மணி அளவில், அண்ணா நகர் கிழக்கு ரயில் நிறுத்தம் அருகில் ரயில் பாதையின் மேல்பகுதியில் திடீரென்று ஏதோஒன்ற வெடித்தது. அதனால், ரயிலிலிருந்து பயணிகள் இறக்கவிடப்பட்டனர். பின்னரும், பயணிகள் ஏறிய ரயில் ஒரு மணி நேரமாக பாதாள ரயில் பாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானதால் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் முன் பதிவு செய்த பயணிகள் பெரும்பாலானோர் ரயிலை தவறவிடவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 

விக்னேஷ்குமார்
மாணவப் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!