``மதுவை ஒழிக்க தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி தேவை” -மகளிர் மாநாட்டில் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

பொன்.ராதாகிருஷ்ணன்

`தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழிக்க பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும்' என மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் பா.ஜ.க மகளிர் மாநாட்டில் பேசினார்.

மதுரை ஒத்தக்கடையில் தமிழக பா.ஜ.க-வின் மாநில மகளிர் மாநாடு `தமிழ்மகள் தாமரை மாநாடு'  என்ற பெயரில், பா.ஜ.க மாநில மகளிர் அணித்தலைவர் ஏ.ஆர்.மஹாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அகில இந்திய மகளிர் அணித்தலைவர் விஜய ராகத் கர், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும், அதன் வெளிப்பாடு இந்த மாநாட்டில் தெரிகிறது. 2012 - தாமரை சங்க மாநாட்டைப் போல் தற்போது இந்தக் கூட்டம் உள்ளது. தமிழகம் தாமரை பக்கம் திரள்கிறது என்பதற்கு இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. தொடர்ந்து இதேபோல் பா.ஜ.க மாநாடு தமிழகத்தில் வரும் காலத்தில் நடைபெறும். பெண்கள் பாஸ்போர்ட் எடுக்கத் தந்தை அல்லது கணவர் பெயரைக் குறிப்பிட வேண்டும். தற்போது அது அவசியம் இல்லை. தந்தை இல்லாத, கணவர் இல்லாத பெண்கள் சிரமத்தைப் புரிந்துகொண்டு அந்த சிஸ்டத்தை மாற்றியுள்ளார் மோடி. திராவிட கட்சிகள் டாஸ்மாக்கை ஒழிக்க மாட்டார்கள். டாஸ்மாக் கடையை ஒழிக்க மோடியால் மட்டும்தான் முடியும். எனவே, தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும்"  எனத் தெரிவித்தார். 

மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், ``மதுரையில் எது ஆரம்பித்தாலும் வெற்றி கிடைக்கும். நான் கூட மதுரையில் தான் பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்தேன். தற்போது தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக உயர்ந்து நிற்கிறேன். எனவே, இந்த மகளிர் மாநாடு தாமரையை கண்டிப்பாக மலர வைக்கும். சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு, இது ஒன்று போதாதா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு எனக் கருதுவதற்கு. இலவச கேஸ் அடுப்பு கொடுத்து நுரையீரல், ஆஸ்துமா போன்ற நோய்களில் இருந்து பெண்களைப் பாதுகாத்தவர்தான் மோடி.  இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது என்னால் சவால் விட்டுச் சொல்ல முடியும் தாமரை மலரும் என்று" எனப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!