``15-ம் தேதி பட்டா கொடுக்கிறோம்’’ - திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீயிடம் உறுதி கொடுத்த காஞ்சிபுரம் ஆட்சியர் 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரம் பகுதியில் கடந்த 15 வருடங்களாகத் திருநங்கைகள் வாழ்ந்து வருகிறார்கள். கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள், இருளர்கள் உள்ளிட்டோர் அங்குத் தங்க வைக்கப்படுவது வழக்கம். அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களுக்கு பட்டா கொடுக்க வேண்டி நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். இந்தநிலையில், திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ தலைமையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவைச் சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, ஆகஸ்டு 15ம் தேதி அவர்களுக்குப் பட்டா வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பட்டா வழங்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருநங்கைகள் தெரிவித்திருக்கிறார்கள்.

திருநங்கைகள் பட்டா வேண்டி மனு

இதுகுறித்து திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ கூறுகையில்,“நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக நடராஜபுரம் பகுதியில் வாழ்ந்து வருகிறோம். அதில், நிறைய பேருக்கு வீட்டுமனைப் பட்டாகூட கிடையாது. பட்டா இருந்தால்தான் அரசின் திட்டங்கள் மூலம் வீடு கட்ட முடியும். பட்டா வேண்டி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததன் காரணமாக, செய்யூர் பகுதியில் எங்களுக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.ஆனால், அந்தக் கோப்புகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கின்றன. அந்தக் கோப்புகள் பணியை விரைவாக முடித்து எங்களுக்குப் பட்டா கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருக்கிறோம். ஆகஸ்டு 15ம் தேதி பட்டா கொடுக்க உத்தரவு போட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் நாங்கள் நம்பிக்கையாகச் செல்கிறோம்”என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!