சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் 583 பேர் கைது!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ரப்பர் கழக ஊழியர்கள் 583 பேர் கைது செய்யப்பட்டனர்.

திய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ரப்பர் கழக ஊழியர்கள் 583 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள்  கோதையாறு, மருதம்பாறை, சிற்றார், மைலார், மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, பரளியாறு ஆகிய 8 மண்டலங்களிலில் செயல்படுகின்றன. கீரிப்பாறை, மைலார் ஆகிய இரண்டு இடங்களில் அரசு ரப்பர் கழகதொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தினக்கூலி தொழிலாளர்களையும் சேர்த்து சுமார் 3,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2016 -ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து 32 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முறையான தீர்வு ஏற்படவில்லை.

இதை கண்டித்து  ஒத்துழையாமை  இயக்கம் என்ற போராட்டம் நடத்தினர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இழப்பீட்டுத்தொகை தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு ஊழியர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 200 பெண்கள் உள்பட 583 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!