அகற்றப்படாத டாஸ்மாக்.. வீட்டுக்குள் பாட்டிலை வீசும் குடிமகன்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதாகக் குற்றம்சாட்டுகின்றனர் உத்தமபாளையம் நகர பொதுமக்கள்.

டாஸ்மாக் எதிராக போராட்டம்

``கடந்த இரண்டு ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகள் இல்லாமல் உத்தமபாளையம் மக்கள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில், தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அதன் அருகில், குடியிருப்புகள் இருப்பதால், குடித்துவிட்டு வரும் குடிமகன்கள், பாட்டில்களை வீட்டுக்குள் வீசிவிட்டுச் செல்கின்றனர். இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கூறினோம். உத்தமபாளையம் தாசில்தாரை அழைத்து டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பின்னரும், இன்னமும் அகற்றப்படவில்லை. கலால்துறை அதிகாரிகளைக் கையில் வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் ஆடும் ஆட்டத்தில் பொதுமக்கள் தினம் தினம் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துவருகிறார்கள்’’ என்றார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் உத்தமபாளையம் நகரத் தலைவர் ஹக்கீம் சேட்.

``குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறந்தது மட்டுமல்லாமல், வீட்டுக்குள் பாட்டிலை வீசும் குடிமகன்களை கண்டுகொள்ளாமலும் இருக்கிறது மாவட்ட நிர்வாகம். இந்த டாஸ்மாக் கடையால் நாளைச் சட்டம் ஒழுங்குப் பிரச்னை கூட ஏற்படலாம்” என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!