தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட மகன் - மதுரையில் நடந்த சோகம்!

தாயார் இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல் விஷம் குடித்து மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஆரப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை

மதுரை, ஆரப்பாளையம் மேலமாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் மறைந்த கணேசன் என்பவரின் மனைவி தனலட்சுமி (80) உடல்நலமில்லாமல் ஞாயிறு காலையில் இறந்தார். இவருடைய இறுதிக் காரியங்களை உறவினர்கள் கவனித்துக்கொண்டிருந்தபோது, தாயார் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் புலம்பிக்கொண்டிருந்த தனலட்சுமியின் மூன்றாவது மகன் சிவாஜி செல்வரங்கன் (58) விஷம் குடித்து  நேற்று  தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட சிவாஜி செல்வரங்கத்தின் குடும்பத்தார் திராவிட இயக்கத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். மறைந்த அவரின் தந்தை கணேசன் பகுத்தறிவுப் பேச்சாளராகத் திகழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்ட நிலையில் அவரின் மனைவி தனலட்சுமியே பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்.  மூன்றாவது மகனான செல்வரங்கனுக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்ட நிலையில், அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகமாகப் பாசம் வைத்த அம்மா இறந்த துக்கம் தாங்க முடியாமல் குருணை மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!