தூக்கில் தொங்கிய இளம் காவலர் - கோவையில் போலீஸ் தீவிர விசாரணை

காவலர் அமர்நாத்

கோவையில்  தமிழ்நாடு சிறப்புக் காவல்படை நான்காம்  அணியில் எழுத்தராகப் பணியாற்றி வந்த அமர்நாத் என்ற காவலர், முகாம் வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை அடுத்து கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் 4-ம் அணியில் உள்ள கம்பெனியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தவர் அமர்நாத். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2016-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். பணிக்குச் சேர்ந்ததிலிருந்தே துடிப்புடன் பணியாற்றி வந்த அமர்நாத் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை பணியில் இருந்த அமர்நாத், நேற்று (23-07-2018) காலை அவர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அமர்நாத்தின் உடலை மீட்டக் காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமர்நாத் காதல் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!