குடிபோதையில் பைக் ஓட்டிய கோவை போலீஸ்... சிறைபிடித்த பொதுமக்கள்.. வைரல் வீடியோ..!

கோவையில். குடிபோதையில் அதுவும் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோவையில். குடிபோதையில் அதுவும் சீருடையுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய போலீஸ்காரருடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குடிபோதை போலீஸ்

கோவை செல்வபுரம் காவல்நிலையத்துக்குட்பட்ட, ஹவுசிங் யூனிட் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு, போலீஸ்காரர் ஒருவர், குடிபோதையில், சீருடையுடன், ஹோண்டா யுனிகார்ன் பைக்கை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதையடுத்து, அவரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள் சிலர், ``யோவ் போலீஸ்.. வண்டிய ஓரம் கட்டு… ஒரு போலீஸ் இப்படி பண்ணலாமா… நாங்க ஹெல்மெட் போடாம வந்தா மட்டும் பிரச்னை, நீங்க மட்டும் தண்ணி போட்டு வண்டி ஓட்டினா பிரச்னை இல்லயா... தண்ணீயடுச்சுட்டு வண்டி ஓட்டினா 10 ஆயிரம் ஃபைன்னு அறிவிக்கறீங்கள்ள…? வண்டிய விட்டு இறங்குயா” என்கின்றனர். இவை எதற்கும் பதில் சொல்லும் நிலையில் அந்த போலீஸ் இல்லை. அப்படியே தள்ளாடியபடி வண்டியை விட்டு இறங்கி நிற்கிறார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களளில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த போலீஸின் பெயர் வினோத். பொதுமக்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அவருக்கு, டிடி (Drunk and Drive) போட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மீது யாரும் புகார் அளிக்காதபட்சத்தில், துறைரீதியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, அமைச்சர் வேலுமணியும் ஆய்வின்போது ஹெல்மெட் அணியாமல்  இருசக்கர வாகனம் ஓட்டினார். சட்டம் என்பது சாமானியர்களுக்கு மட்டும்தானா யுவர் ஹானர்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!