வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (24/07/2018)

கடைசி தொடர்பு:14:05 (24/07/2018)

பதுங்கியிருந்து ரவுடி குள்ள சீனுவை கொலை செய்த கும்பல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2012-2014 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடந்தன. அதில் முன்விரோதம், அரசியல் பகை, தொழில் போட்டி போன்ற காரணங்களால் ஏற்பட்ட கொலைகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்துப் பல அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டார்கள். கடந்த சில வருடங்களாகப் பழிக்குப்பழி கொலைகள் இல்லாமல் செங்கல்பட்டு நகரம் ஓரளவு அமைதியாய் இருந்தது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு குள்ள சீனு என்ற ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

செங்கல்பட்டு ரவுடி குள்ள சீனு கொலை

செங்கல்பட்டு அ.தி.மு.க நகரச் செயலாளர் ‘குரங்கு’ குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர் குள்ள சீனு. இவர் ‘குரங்கு’ குமாரை கொலை செய்த ரவுடி ரவிபிரகாஷின் கூட்டாளி. நகர்மன்ற துணைச் செயலாளராக ரவிபிரகாஷ் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கொல்லப்பட்டார். ரவிபிரகாஷை கொலை செய்த பட்டரைவாக்கம் சிவாவை கொலை செய்ய முயற்சி செய்ததாக சீனு மீது வழக்கு உள்ளது. செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் உள்ள நான்கு வழக்குகள் உட்பட பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் சீனு மீது இருக்கின்றன. இன்று காலையில் செங்கல்பட்டில் நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார் சீனு. அப்போது பதுங்கி இருந்த ரவுடிகள் நோட்டமிட்டு சீனுவை கொடூரமாகத் தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார் சீனு. செங்கல்பட்டு நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க