புதுச்சேரிக்கு வந்த 163 ஆண்டுகள் பழைமையான நீராவி ரயில் இன்ஜின்!

இந்திய ரயில்வேயின் பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் விதமாக 163 ஆண்டுகள் பழமையான நீராவி ரயில்  இன்ஜின் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்துள்ளது.

நீராவி ரயில் என்ஜின்

இந்திய ரயில்வே பாரம்பர்யத்தை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டுதோறும் நீராவி ரயில்  இன்ஜின் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  சமீபத்தில், சென்னையில் இந்த நீராவி ரயில் இன்ஜின் இயக்கப்பட்டது. தற்போது, புதுச்சேரிக்கு வந்து இறங்கிய பழைமையான  ஈஐஆர் 21 என்ற  நீராவி ரயில் இன்ஜின், 163 ஆண்டுகள் பழைமையானது. புதுச்சேரியில் இருந்து சின்னபாபுசமுத்திரம் வரை இந்த இன்ஜினை இயக்க வாய்ப்புள்ளது. இன்ஜின் இயக்கப்படும் நாள் மற்றும் கட்டணம் தொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக திருச்சி ரயில்வே கோட்டத்தில் விசாரித்தபோது, "தெற்கு ரயில்வேயின் பாரம்பர்யத்தையும், பழைமையையும் பறைசாற்றும் வகையில் அவ்வப்போது ரயில்கள்  இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 163 ஆண்டுகள் பழைமையான நீராவி ரயில் இன்ஜின், புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் நாள்  விரைவில் தெரிவிக்கப்படும். அதன்பிறகு, திருச்சியிலும் இயக்கப்படும். மொத்தம் 40 இருக்கைகள்கொண்ட இந்த ரயில் புறப்படும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக டிக்கெட் தரப்படும். கட்டணம்குறித்த தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்'' என்று குறிப்பிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!