வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (24/07/2018)

கடைசி தொடர்பு:19:20 (24/07/2018)

`விவசாயிகளின் நிலத்தை அழித்து சாலை போடும் அரசியல்வாதிகள் பார்க்க வேண்டிய படம்' - சத்யராஜ்

விவசாய நிலங்களை அழித்து சாலை அமைக்க நினைக்கும் அரசியல்வாதிகள் கடைக்குட்டி சிங்கம் படத்தைப் பார்க்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

சத்யராஜ்

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `கடைக்குட்டி சிங்கம்'. இந்தத் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தில் கார்த்திக் ஜோடியாக வனமகன் படத்தில் நடித்த சாயிஷா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பானுப்ரியா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விவசாயிகள் சிலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், `கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை, விவசாயிகளின் விளைநிலத்தை அழித்து சாலை போட முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் போடும் பட்டங்கள் பொருந்துதோ பொருந்தாதோ தெரியவில்லை. ஆனால், விவசாயி நெல் ஜெயராமன் தன் பெயருக்கு முன்னால் குறிப்பிட்டிருக்கும் வார்த்தை அவருக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது' என்று கூறினார்.