சென்னையி்ல் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ்: உயிர் தப்பிய பயணிகள் (படங்கள்)

சென்னை: சென்னை வண்டலூரில் நடுரோட்டில் ஆம்னி பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
 

பட்டுக்கோட்டையில்  இருந்து ஆம்னி பேருந்து ஒன்று சென்னை வந்து கொண்டிருந்தது. வண்டலூர் அருகே இன்று காலை வந்த போது ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது, தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் கண்விழித்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.
 

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்தது. சுமார் 4 மணி போராடி தீயணைக்கப்பட்டது.
 

இந்த தீ விபத்தால் வண்டலூரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பேருந்தின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக தெரிய வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!