மரக்கடையில் ஏற்பட்ட தீ பள்ளிக்கூடத்துக்குப் பரவியது! பெரும் விபத்து தவிர்ப்பு

சிவகாசி அருகே  இன்று அதிகாலை மரக்கடையில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தை

சிவகாசி அருகே  இன்று அதிகாலையில் மரக்கடையில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்ததால், அருகிலிருந்த பள்ளிக்கட்டடத்துக்கு தீ பரவாமல் பெரிய விபத்து தடுக்கப்பட்டது. 

தீ விபத்து


சிவகாசி வெம்பக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஜனகர் என்பவரின்  மரக்கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள்  தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று வேகமாக வீசியதால் கடை முழுவதும் தீ பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மரக்கடைக்கு அருகிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்திலும் தீ பரவியதால், பள்ளியின் ஜன்னல்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ பெரிய அளவில் பரவும் முன் அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால், பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் 40,00,000 ரூபாய் மதிப்பிலான மரச்சாமான்கள் மற்றும் மரம் உடைக்கும் இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்  தீ விபத்துக்கான காரணம் என்னவென்பதை  விசாரணை செய்து வருகின்றனர். சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூலம் விபத்துகள் ஒருபக்கம் என்றால், மற்ற தொழில் நிறுவனங்களால் தீ விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!