ஏற்றுமதியில் வெற்றி பெறுவது எப்படி? - கோவையில் நாணயம் விகடன் கான்க்ளேவ்

கோவையில் வரும் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் கருத்தரங்கை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் கலந்துகொண்டு 'விஷன் 2015' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தங்களது கருத்துகளை பகிர்கிறார்கள். இந்த கான்க்ளேவ் நிகழ்ச்சியில், ``ஏற்றுமதியில் வெற்றி பெறுவது எப்படி?" என்பது குறித்து, சென்டர் ஃபார் இந்தியன் டிரேட் அண்ட் எக்ஸ்போர்ட் புரோமோஷன்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரியும் ஃபியோ அமைப்பின் முன்னாள் துணை டைரக்டர் ஜெனரலுமான அசோகன் ஆர்.ராஜா விரிவாகப் பேசவிருக்கிறார். 

கான்க்ளேவ்

சர்வதேச அளவில் வருங்காலத்தில் என்ன மாதிரியான பொருள்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன? லாபகரமான ஏற்றுமதியாளராக வளர என்னென்ன செய்ய வேண்டும்? இறக்குமதியாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? ஏற்றுமதியாளர்களுக்கான சவால்கள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பாக இந்த கான்க்ளேவ் நிகழ்ச்சி அமையும். 
 

ஏற்றுமதித்துறையில் தொடர்ந்து இயங்கிவருபவர்கள் அவர்களுடையை சந்தேகங்களுக்கு விடை காணலாம். புதிதாகக் கால்பதிக்க விரும்புபவர்கள் ஏற்றுமதித்துறை குறித்த தெளிவு பெறலாம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், 
https://www.vikatan.com/special/tickets/nanayam-conclave/ என்ற லிங்கிற்குச் சென்று தங்களது பெயரைப் பதிவு செய்யவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!