லாரி ஸ்டிரைக் எதிரொலி; காய்கறிகள் விலை கடும் உயர்வு! | lorry strike reflects in vegetables price hike in nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (25/07/2018)

கடைசி தொடர்பு:16:19 (25/07/2018)

லாரி ஸ்டிரைக் எதிரொலி; காய்கறிகள் விலை கடும் உயர்வு!

பெட்ராேல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20-ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தாெடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் பாேராட்டம் தாெடங்கிய முதல்  மூன்று நாள்களில், பெரும்பாலான லாரிகள் வழக்கம்போல இயங்கிய நிலையில், 23-ம் தேதி இரவு, ஊட்டியிலிருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச்சென்ற லாரி,  தமிழக கேரள எல்லையான வழிக்கடவு என்ற இடத்தில் தாக்கப்பட்டது. அதேபோல வாளையார் பகுதியில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர் மீது நடந்த தாக்குதலில், கிளீனர் உயிரிழந்தார். இச்சம்பவங்களை அடுத்து, நீலகிரி மாவட்டத்திலும் லாரிகள் இயங்குவது 90 சதவிகிதம் வரை குறைந்தது. இதனால், அறுவடை செய்யப்பட்ட பீட் ரூட், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக் காய்கறிகள் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழக காய்கறிச் சந்தைக்கும், கேரள காய்கறிச் சந்தைக்கும் அனுப்புவது தடைப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் பிக்கப் வாகனம் மூலம் சந்தைகளுக்கு அனுப்பிவருகின்றனர். 

சில விவசாயிகள், லாரிகள் வேலை நிறுத்தத்தை மனதில் கொண்டு, முன்கூட்டியே பயிரை அறுவடை செய்து விற்றுவிட்டனர். ஆனால் பெரும்பாலான விவசாயிகள், லாரிகள் வேலை நிறுத்தத்தால், அறுவடைக்குத் தயாராகியுள்ள பயிரை இன்னமும் அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டுவைத்துள்ளதால், ஊட்டி மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. 

இதுகுறித்து ஊட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‛‛ லாரிகள் ஓடாததால் காய்கறி வரத்து கடுமையாகச் சரிந்துள்ளது. லாரிகள் வேலை நிறுத்துக்கு முந்தைய நாள், சில்லறையில் ஒரு கிலாே ரூ.30-க்கு விற்பனைசெய்யப்பட்ட பீட்ரூட் ரூ. 65,  ரூ. 20-க்கு விற்பனையான கேரட் ரூ. 40, ரூ. 30-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ. 80, ரூ. 120-க்கு விற்பனையான பட்டாணி ரூ. 200, ரூ. 80-க்கு விற்பனையான புரொக்கோலி ரூ. 160, ரூ. 50-க்கு விற்பனையான பூகோஸ் ரூ. 80 என விலை உயர்ந்துள்ளது.  இதனால், நாள் ஒன்றுக்கு    ரூ.40 லட்சம் வரை வியாபாரம் நடைபெறும் மார்க்கெட்டில் ரூ. 10 லட்சம் வரைகூட வியாபாரம் நடப்பதில்லை’’என்றார். லாரிகள் வேலை நிறுத்தம் தாெடரும் பட்சத்தில், காய்கறிகள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும், இதனால் பாதிக்கப்படுவது பாெதுமக்கள்தான். 

இந்நிலையில், லாரிகளின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் வரை, அரசு பேருந்துகளில் காய்கறிகளைக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்ளூரில் காய்கறிகளை இலவசமாகக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம், சென்னை வரை பேருந்துகளில் காய்கறிகளைக் கொண்டு செல்லக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தத்தால், விவசாயிகள் விளை பொருள்களை அரசு பேருந்துகளில் சந்தைக்கு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இது குறித்த விவரங்களுக்கு, அரசு போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0423 - 2441260 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close