``அந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்'' - நழுவிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் | O.S.maniyan about panneerselvam delhi visit

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:16:17 (25/07/2018)

``அந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்'' - நழுவிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

'டெல்லியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கச் சென்ற துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்க மறுத்த விவகாரம் பற்றி, அவரிடம்தான் கேட்க வேண்டும்' என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

ஆடி சிறப்பு கைத்தறிக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க, இன்று மதுரை வந்த கைத்தறி மற்றும் ஜவுளிதுறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது கைத்தறிப் பொருள்களை  ஆன்லைன்மூலம் வாங்கிக் கொள்ளலாம். கைத்தறித் துணிகளைத் தேக்கமில்லாமல் விற்பனைசெய்துவருகிறோம். ரூ. 15 கோடிக்கு மேல் மதிப்புள்ள  பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம்,  ரூ. 2 கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளோம். இந்த முறை  ரூ. 2.5 கோடி இலக்கு  நிர்ணயித்துள்ளோம்" என்றார்.

 "டெல்லிக்குச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காது ஏன் என்ற கேள்வியை அமைச்சரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "துணை முதல்வரை மத்திய அமைச்சர் சந்திக்காததற்குக் காரணம், என்னவென்பதை அவரே சொல்லிவிட்டார். அவர் தனிப்பட்ட முறையில்  சென்றுள்ளார். இதைப் பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றவர், " அ.தி.மு.க நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எதையும் தனியாகச் சந்தித்த கட்சி; வெற்றியும் பெற்ற கட்சி" என்று கூறிவிட்டுச் சென்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க