வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:17:00 (25/07/2018)

 ‘எங்களுக்கு உதவி செய்யுங்கள்’?! - எம்.பி-க்களுக்கு தேனா வங்கி ஊழியர்கள் கடிதம் 

``பொதுத்துறை வங்கிகளில் கடன் அளிக்கக் கூடாது என்பதை திரும்பப் பெற வேண்டும். இதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு உதவ வேண்டும்'' என தேனா வங்கி சார்பில் எம்.பி-க்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

தேனா வங்கி

தேனா வங்கி உட்பட 11 பொதுத்துறை வங்கிகள் கடன் அளிக்கக் கூடாது, யாரையும் புதிதாக வேலைக்கு நியமிக்கக் கூடாது என கடந்த மே மாதம்  ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இது, மொத்த பொதுத்துறை வங்கி ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை எதிர்த்து, ஜூன் மாதம் தேனா வங்கி போராட்டம் அறிவித்தது. அத்துடன், பெரு நிறுவனங்களிலிருந்து கடன் வசூல் ஆகாமல் இருந்தால், அதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வேறு நிறுவனம் வைத்திருந்து, அதன்மூலம் கடன் பெற முயன்றால், அந்தக் கடன் மறுக்கப்பட வேண்டும். அவர்களுக்குக் கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளே வாராக்கடனுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் முன்வைக்கப்பட்டது. நீண்ட நாள்களாகத் தொடர்ந்து போராடியும் இது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், தற்போது தேனா வங்கி ஊழியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடியுள்ளனர். 

இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனைத்து இந்திய தேனா வங்கி ஊழியர்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்கக் கூடாது, புதிய பணியாளர்களைத் தேர்வுசெய்யக் கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். எப்போதும் இல்லாமல் ரிசர்வ் வங்கி இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பைத் தடை செய்வதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

தேனா வங்கி