கடிதத்துடன் சென்ற வைகோ - வரவேற்ற கேரள முதல்வர்

நியூட்ரினோ திட்டத்தின் பாதிப்புகள் அடங்கிய விளக்கக் கடிதத்துடன், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்தார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில், மத்திய அரசு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு  அரசியல் கட்சிகளும் சுற்றுச்சுழல் அமைப்புகளும் உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆய்வகம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியில் வேகம் காட்டிவருகிறது மத்திய அரசு. தமிழக மாசுக் கட்டுப்பாட்டுவாரியத்தின் அனுமதியைப் பெறுவதற்காக முனைப்புகாட்டிவரும் சூழலில், கேரள தலைமைச் செயலக முதல்வர் அறையில் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசி, நியூட்ரினோ திட்டத்தின் பாதிப்புகள் அடங்கிய விளக்கக் கடிதத்தையும் வழங்கினார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

வைகோ

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா’வை அவரது இல்லத்தில் சந்தித்த வைகோ, வரும் செப்டம்பர் 15-ல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்புக் கடிதம் கொடுத்தார், அப்போது, நியூட்ரினோ திட்டத்தின் பாதிப்புகள் அடங்கிய விளக்கக் கடிதத்தையும் வழங்கினார்.

இதுகுறித்து ம.தி.மு.க-வினர் கூறுகையில், ‘’கேரளாவில்  ஆளும், எதிர்கட்சித் தலைவர்களைச் சந்தித்து, நியூட்ரினோவுக்கு எதிரான பயணத்தில் என்னோடு நில்லுங்கள்! என்று கேட்டுக்கொண்டார் வைகோ. நியூட்ரினோ திட்டத்தின் ஆபத்துகள் தொடர்பான விளக்கக் கடிதத்தை ஆய்வுசெய்துவிட்டு, தக்க முடிவெடுப்பதாக இருவரும் கூறியுள்ளனர். கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன், நியூட்ரினோவை எதிர்த்தார். உடல்நிலை சரியில்லாததால் அவரை சந்திக்க முடியவில்லை’’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!