`லஞ்சம் கொடுத்தால் ஆவணம் தருவேன்' - பதிவாளருக்கு எதிராகக் கொந்தளித்த வக்கீல்கள்

நீதிமன்றத்தில் பாகப்பிரிவினையில் ஏற்பட்ட சமரசத்தைப் பதிவு செய்து அதற்கான ஆவணத்தைக் கொடுக்க லஞ்சம் கேட்ட மாவட்ட பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பதிவுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுவது வழக்கம். இதில் பாகப்பிரிவினை, சொத்து பிரச்னை உள்ளிட்ட சில வழக்குகளில் இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வழக்கைத் திரும்ப பெற்றுக்கொள்வார்கள். இவ்வகையான சமரசம் முறையாகப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆவணம் கொடுக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இருதரப்பினரிடையே பாகப்பிரிவினையில் ஏற்பட்ட சமரசத்தை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த வழக்கறிஞர் மனோகரன் அதற்கான ஆவணத்தைக் கேட்டுள்ளார். அப்போது மாவட்ட பத்திரப் பதிவாளர் ரமேஷ் லஞ்சம் கேட்டதுமட்டுமல்லாமல் ஆவணத்தைக் கொடுக்காமல் அலையவிட்டுத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இடைத்தரகர்களை வைத்து பத்திரங்களைப் பதிவு செய்வதாகவும் பொதுமக்களிடம் பத்திரப்பதிவுக்கு அதிகளவில் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம்சாட்டி வழக்கறிஞர்களைத் தரக்குறைவாகப் பேசிய மாவட்ட பதிவாளரை கைது செய்ய வேண்டும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள இடைத்தரகர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!