அரசு தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியம் 14,000-மாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு! | TN Government announced hikes Rs 14,000 for temporary nurses

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (25/07/2018)

அரசு தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியம் 14,000-மாக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!

அரசு தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியத்தை 7,700-லிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

செவிலியர்களுக்கான

ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு தற்காலிக செவிலியர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் `தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியம் தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு ஆரம்பத்தில் மாத ஊதியமாக 7,700 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.

நிரந்தர செவிலியர்கள் பணியிடங்கள் காலியாகும்போது தற்காலிக செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக்கப்படுவர். இந்த இடைப்பட்ட காலமான தற்காலிக செவிலியர்களாக அவர்கள் பணியாற்றும் காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்காலிக செவிலியர்களுக்கான மாத ஊதியம் 7,700-லிருந்து 14,000 ரூபாயமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு முன் தேதியிட்டு 01.04.2018 முதல் வழங்கப்படும். அதே போல ஆண்டுதோறும் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.