`அபாகஸ்' போட்டியில் சர்வதேச அளவில் தங்கம் -கூடுவாஞ்சேரி மாணவன் அசத்தல்!

ஹாங்காங்கில் நடைபெற்ற உலக அளவிலான அபாகஸ் (நுண்திறன் சார் கணிதவியல்) போட்டியில் இந்திய அளவில் 36 மாணவர்களும், உலக அளவில் 500-மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் சாய்விஷாந்த் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மாணவன் சாய்விஷாந்த்

இவர் கடந்த ஆண்டு தைவானில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு இளம்வயதில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இந்தியாவில் இருந்து அழைத்துச் சென்றவர்களில் சாய்விஷாந்த் டாப் ஸ்கோர் செய்திருக்கிறார். சர்வதேச அளவில் ‘பி’ கிரேடில் ஒரு சாம்பியன், இரண்டு கோல்டு மெடல் கொடுப்பார்கள். அதில் சாம்பியனும், ஒரு கோல்டு மெடலும் சாய்விஷாந்திற்கு கிடைத்துள்ளது. அதுபோல் விருதுநகர் பகுதியில் இருந்தும் ஒரு மாணவன் இவருடன் தங்கம் வென்றிருக்கிறார். “படிப்பு, அபாகஸ் என எதுவானாலும் கடுமையாக முயற்சி மேற்கொள்வான் சாய்விஷாந்த். தினமும் ஒன்றரை மணிநேரம் பயிற்சி எடுப்பான். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ஐந்து மணி நேரம் பயிற்சி எடுப்பான். கடினமான 30 பெருக்கல் கணக்குகளையும், 25 வகுத்தல் கணக்குகளையும் தலா 3 நிமிடத்தில் முடிக்க வேண்டும். இதுபோன்று கடுமையான கணக்குகளை குறிப்பிட்ட கால அவகாலத்தில் முடிக்க வேண்டும். அதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களும் கொடுத்த உற்சாகமும், சாய்விஷாந்திற்கு தங்க பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளது” என மாணவர் தரப்பில் பேசியவர்கள் தெரிவிக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!