தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து.. வேட்டியை மடித்துக் கட்டி களத்தில் இறங்கிய அமைச்சர்! | Tn Minister Vijayabaskar saves victims in accident near Puthukottai

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (26/07/2018)

கடைசி தொடர்பு:07:57 (26/07/2018)

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து.. வேட்டியை மடித்துக் கட்டி களத்தில் இறங்கிய அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
விஜயபாஸ்கர்

நேற்று மாலை சரியாக 7.30 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை - கீரனூர் பைபாஸ் சாலையில் ராயல் பாலிடெக்னிக் அருகில்  டாட்டா ஏஸ் வாகனமும் ஒரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  சிக்கியவர்கள் படுகாயமடைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில்  உயிருக்குப்  போராடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கார் மூலம் புதுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நடந்த விபத்து குறித்து அறிந்ததும், சட்டெனக் காரை நிறுத்திய அமைச்சர், படுகாயம் அடைந்தவர்களைத் தனது பாதுகாப்பு வாகனத்தில் உடனடியாக ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்தில் சிக்கி சிறிய காயம் அடைந்தவர்களை மீட்டுத் தாமதிக்காமல் 108 வாகனத்தை வரவழைத்து அந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடியவர்களைப் பார்த்ததும் வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கி அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.