தீப்பிடித்து எரிந்த வீரஅழகர்.. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்து? | Fire accident in temple, will leads to danger for chief minister's position

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (26/07/2018)

கடைசி தொடர்பு:07:40 (26/07/2018)

தீப்பிடித்து எரிந்த வீரஅழகர்.. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஆபத்து?

மானாமதுரையில் ஆடித் திருவிழாவின்போது வீரஅழகர் தீயில் கருகிய சம்பவம் எடப்பாடி அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனப் பொது மக்களும் ஆளும் கட்சியினரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

தி விபத்து

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடித்திருவிழா வைகை ஆற்றில்  ஏழாம்நாள் மண்டகப்படி கொண்டாடப்பட்டது. அப்போது மண்டகப்படி கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் தங்கமுலாம் பூசப்பட்ட வீர அழகர் சாமிசிலை கருப்பாகிவிட்டது. கொட்டகை வளாகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த 15 செண்டைமேளமும் எரிந்து நாசமாகிவிட்டது. இதன் மதிப்பு ரூபாய் 2,00,000 ஆகும். 

மானாமதுரையில் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் சித்திரை திருவிழா மே மாதம் நடைபெற்றது. இவ் விழாவினைத் தொடர்ந்து  அழகர் ஆடிமாதம் தீர்த்தம் ஆடி அதன் பிறகுதான் கோயிலுக்குள் செல்வது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவானது வரும் வெள்ளியன்று அலங்கார குளத்தில் தீர்த்தவாரி செய்து, அதன்பின்பே வீர அழகர் சாமி சிலை கோயிலுக்குள் கொண்டு செல்லப்படும். இதற்கு முன்னதாக ஏழாம் திருநாள் மண்டகப்படி சுந்தரபுரம் கடைவீதி மண்டகப்படிதார்கள் சிறப்பாகக் கொண்டாட, நேற்று வீர அழகர் மத்திய கூட்டுறவு வங்கி அருகே உள்ள மண்டகப்படி கொட்டகைக்கு செண்டை மேளம் முழங்கச் சிறப்பான வரவேற்போடு சென்றார். இதன் பின்பு மண்டகப்படியில் வீர அழகர் சாமி சிலைவைக்கப்பட்டு மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். அப்போது மதியம்  மண்டகப்படி கொட்டகை  திடீரென தீப்பிடித்து எரிந்தது. மக்கள் பதறிப் போய் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடுத்ததாக தீயணைப்புத்துறையினர் விரைவாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தார்கள். இதில் 2,00,000 ரூபாய் மதிப்புள்ள செண்டைமேளம் எரிந்து நாசமானது. வீர அழகர் சாமி சிலை கறுத்துவிட்டதால், சாமி சிலை கோயிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டது. இதோடு சாமி விளக்கு, பூஜை பொருள்களும் எரிந்து நாசமாயின.
 

வீரஅழகர்

இந்த தீ சம்பவம் குறித்து ஆன்மிக ஜோதிடர்கள் பேசும்போது, ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோது அ.தி.மு.க-வினர் வெடி வைத்ததில் காளையார் கோவில் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது. அந்தச் சம்பவம் நடைபெற்ற பிறகு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோதே சிறை சென்றார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். அதேபோன்று மானாமதுரையில் பிரதோஷத்தன்று வீர அழகர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் எடப்பாடி அரசுக்கு ஆபத்தாக அமையும்” என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க