ஆகஸ்ட் 19-ல் கூடுகிறது தி.மு.க பொதுக்குழு - மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு ஆகஸ்ட் 19-ம் தேதி கூடுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள், நிர்வாகிகள் மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பொதுக்குழு

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்ட வேண்டும். அந்த வகையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கடந்தாண்டு (2017) கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தேடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்தாண்டுக்கான தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை.

தி.மு.க தலைவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவகாசம் கோரியது தி.மு.க. இந்நிலையில் ஆகஸ்ட் 19-ம் தேதி பொதுக்குழுவை தி.மு.க கூட்டுகிறது. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் யாவும் கட்சி அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடப்பது வழக்கம். ஆனால், இந்த முறை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தி.மு.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என 4,000 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு முக்கிய முடிவுகளும், நிர்வாகிகள் மாற்றமும் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!