புத்தகப்பிரியர்களுக்கு வரப்பிரசாதம் - கோவையில் களைகட்டும் புத்தகத் திருவிழா!

கோவையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழா, புத்தகப் பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புத்தகப் பிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் புத்தகத் திருவிழாவுக்கு வந்து பயனடைகின்றனர்.

கோவை புத்தக கண்காட்சி

 

கோவை மாவட்ட சிறு தொழில்களின் சங்கம் சார்பில், கொடிசியா வளாகத்தில் நடைபெற்றுவரும் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா, வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 175 பதிப்பாளர்கள் 270-க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். புத்தகத் திருவிழாவில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

கோவை

இவ்வரங்கில், முன்னாள் குடியரசுத் தலைவர் முதல் இன்னாள் தலைவர்கள் வரையிலான வாழ்க்கை வரலாற்று  நூல்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், ஆங்கில நூல்கள், வட்டார மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில், தமிழ் இலக்கியத்தின் முன்னோடியான புதுமைப்பித்தனின் நாடகம், சிறுகதை, புதினங்கள், கவிதைகள், கடிதங்களும் அடங்கியுள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளும், கவிதைகளும், நாவல்களும் இடம்பெற்றுள்ளன.
சென்னை நூலகம்.காம் என்ற இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு, அதில் 1867-ம் ஆண்டு முதல்  தமிழில் என்னென்ன  நூல்கள் வெளிவந்துள்ளன, அவற்றை எழுதியவர், பதிப்பித்தவர், எங்கு கிடைக்கும் என்ற விவரமும், தொலைபேசி எண்ணும் அதில் இருக்கும். இதைப் பயன்படுத்தி எளிதில் நூல்களை வாங்கிப் பயன்பெறலாம்.

கோவை

இந்நிகழ்ச்சியில், பள்ளி சிறுவர் சிறுமியர்களின் வாசிப்புத் திறனை வெளிக்கொணர்வதற்காக, 'வாசிப்பை நேசிப்போம்' என்ற அமைப்பின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, நாடகம், புத்தகத்திறனாய்வு போன்ற போட்டிகள் நடைபெற்று, பரிசுகளும் வழங்கப்பட்டன. இங்கு அமைக்கப்பட்ட அரங்குகளில், 20 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழா, ஜூலை 29-ம் தேதி வரை நடைபெறும்.

-ரா.கௌசல்யா

-வ.இர.தயாளன்

(மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!