`பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான்!' - குஷ்பு பேட்டி | The prime ministerial candidate is Rahul Gandhi says khushboo

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (26/07/2018)

கடைசி தொடர்பு:14:15 (26/07/2018)

`பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான்!' - குஷ்பு பேட்டி

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிறுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

குஷ்பு

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், உட்கட்சி நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ, ``தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்தினேன். ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை குற்றம் சாட்ட முடியாது. இந்த விவகாரத்தில் சூழல் குறித்தும் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், ``எதையும் தாங்கும் இதயம் எனக் கூறியதன் அர்த்தத்தை துணை முதல்வர் ஓ.பி.எஸ் விளக்க வேண்டும். அ,தி,மு,க அரசு மத்திய அரசுக்கு அடிமையாகவே உள்ளது. அவர்களது செயல்பாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை" எனத் தெரிவித்தார்.

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும் என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிறுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை" எனத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க