கல்லூரி நடத்தி மோசடி! - எஸ்.ஏ.ராஜாவின் மகனை கைது செய்தது ஒடிசா போலீஸ்

டிசாவில் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக எஸ்.ஏ.ராஜாவின் மகன் ஜான்சல் ராஜா அம்மாநிலக் காவல்துறையினரால் நாகர்கோவிலில் இன்று கைது செய்யப்பட்டார்.

எஸ்.ஏ.ராஜாவின் மகன் ஜாண்சல்

வடக்கன்குளத்தை மையமாகக்கொண்டு மறைந்த எஸ்.ஏ.ராஜா கல்வி நிலையங்கள் நடத்திவந்தார். இப்போது கல்வி நிலையங்களை அவரின் மகன்கள் நடத்திவருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் எஸ்.ஏ.ராஜா கல்வி நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில் எஸ்.ஏ. ராஜாவின் மகன் ஜான்சல் ராஜாவை ஒடிசா காவல்துறையினர் இன்று திடீரென கைது செய்தனர்.

ஒடிசாவில் கல்லூரி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் அவரை காவல்துறை கைது செய்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஜான்சல் ராஜா நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர், ஒடிசா அழைத்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த ஜான்சல் ராஜாவின் காரை உடைத்து அதிலிருந்து லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை யாரோ திருடிச்சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!