மனநலம் குன்றியவரை சுத்தப்படுத்தி, புத்தாடை அணிவித்த கோவை போலீஸ்..! | Coimbatore Police cleans Mentally challanged person

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (26/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (26/07/2018)

மனநலம் குன்றியவரை சுத்தப்படுத்தி, புத்தாடை அணிவித்த கோவை போலீஸ்..!

கோவையில் போலீஸ் அதிகாரி ஒருவர், மனநலம் குன்றிய ஒருவரை, சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் போலீஸ் அதிகாரி ஒருவர், மனநலம் குன்றிய ஒருவரை, சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

போலீஸ் மனநலம் குன்றியவர்

கோவை, செல்வபுரம் டி-2 காவல் நிலையத்தில், முதல்நிலை காவலராகப் பணிபுரிபவர் பிரதீப். இவர் பேரூர் ரோடு, வாய்க்காபாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில்  பணியில் இருந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இதையடுத்து, அந்த நபரை தனது பணியின் இடையில், சுத்தம் செய்து, புத்தாடை அணிவித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவலர்கள் லஞ்சம் வாங்குவதும், போதையில் இருசக்கர வாகனம் ஒட்டுவது எனப் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தநிலையில், பிரதீப்பின் செயல்பாடுகள், அதற்கு நேரெதிராகப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கோவையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, மதுபோதையில் தள்ளாடியபடி இருசக்கர வாகனம் ஓட்டிய, காவலர் வினோத் பணிபுரியும் அதே செல்வபுரம் காவல்நிலையத்தில்தான், பிரதீப்பும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.