அப்துல் கலாம் பயின்ற ராமநாதபுரம் பள்ளியில் 3-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி-பேரணி! | Red cross organised rally to commemorate the 3rd death anniversary of Dr APJ Abdul Kalam in Ramnad

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (26/07/2018)

கடைசி தொடர்பு:23:30 (26/07/2018)

அப்துல் கலாம் பயின்ற ராமநாதபுரம் பள்ளியில் 3-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி-பேரணி!

 குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் 3 -வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் நினைவு தின பேரணி ராமநாதபுரத்தில் நடைபெற்றது.

அப்துல்கலாம் நினைவு தின அஞ்சலி

இந்திய செஞ்சிலுவைச் சங்க ராமநாதபுரம் மாவட்டக் கிளையும், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பும் இணைந்து ராமநாதபுரத்தில் குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் நினைவு தினப் பேரணியை நடத்தினார்கள். அப்துல் கலாம் படித்த ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் அப்பள்ளி வளாகத்தில் நிறைவுபெற்றது. பேரணியில் பங்கேற்ற அனைவரும் கலாமின் உருவப்படத்தை கையில் ஏந்திக்கொண்டு அமைதியாக ஊர்வலத்தில் வந்தனர்.

பின்னர், பேரணியில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பலரும் கலாமின் திருஉருவப் படத்துக்கு மலர்களைத் தூவியும்,மெழுகுவத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட சேர்மன் ஹாரூன் தலைமைவகித்தார். புரவலர் ராமநாதன், மாவட்ட அமைப்பாளர் வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலி நிகழ்ச்சியில் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பால்மாறன்,ரெட்கிராஸ் புரவலர் தேவி உலகராஜ் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் தலைமையிலான  நிர்வாகிகள் செய்திருந்தனர்.


[X] Close

[X] Close