வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வருமான வரித்துறை

வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாதவர்கள் மற்றும் கணக்குகளைத் தாக்கல் செய்வதை நிறுத்தியவர்கள்குறித்து வருமான வரித்துறை ஆய்வுசெய்தது. 

இந்த ஆய்வின் அடிப்படையில், வருமான வரி செலுத்தி, அதேசமயம் 2016-17 மற்றும் 2017-18-ம் மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு, அதை நினைவூட்டும் வகையில், வருமான வரித்துறை கடிதங்களை அனுப்பி யிருந்தது.  இந்தக் கடிதங்களைப் பெற்ற வருமான வரி செலுத்தியோர், வருமான வரித்துறையிடம் விளக்கம் கேட்டும், வழிகாட்டு உதவி வழிமுறைகளைக் கோரியும் பதில் அளித்துள்ளனர்.

அவர்கள், தங்கள் கணக்குகளைத் தாக்கல்செய்வதற்கு ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த அவகாசம், மேலும் ஒரு மாதத்துக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!