`கருணாநிதிக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது'- ஸ்டாலின் ட்வீட் #Karunanidhi | Thalaivar is getting the best medical care and treatment tweet by stalin

வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (27/07/2018)

கடைசி தொடர்பு:14:59 (27/07/2018)

`கருணாநிதிக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது'- ஸ்டாலின் ட்வீட் #Karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலம்குறித்து தன்னிடம் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஸ்டாலின். 

கருணாநிதி - ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீரகத் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அரசியல் தலைவர்கள், தமிழ்த் திரைத்துறை பிரபலங்கள் என அனைவரும், கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துவருகின்றனர்.

குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் ட்விட்டர் பக்கத்தில், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் எனப்  பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், `கருணாநிதியின் உடல் நலம்குறித்து தன்னைத் தொடர்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி' என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். 

அந்தப் பதிவில், `கருணாநிதியின் உடல்நலம்குறித்து நலம் விசாரித்த ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அனைவரின் அக்கறை மற்றும் வாழ்த்துகள், அவரை விரைவில் குணமடையச்செய்யும். தலைவருக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர், விரைவில் நலம்பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் அவரது வார்த்தைகளாலே அனைவருக்கும் நன்றி சொல்வார்' எனப் பதிவிட்டுள்ளார்.