டி.டி.வி.தினகரனை விமர்சித்த ஆர்.கே.நகர் பிரமுகர் - எச்சரித்த போலீஸ் 

தினகரனை

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளருமான டி.டி.வி.தினகரனை விமர்சித்த பிரமுகரை போலீஸார் எச்சரித்துள்ளனர். 

டி.டி.வி. தினகரன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு தகவல்கள் பரவின. அதுதொடர்பாக, தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல், ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் அவதூறு தகவல்களைப் பதிவுசெய்தவரை போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்தனர். பிறகு, அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். அவரை கைதுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தினகரன் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் கொடுத்த புகாரின்பேரில், செல்வம் என்பவரிடம் விசாரணை நடத்தினோம். ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றால், 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாகவும் கழிவறை கட்டித்தருவதாகவும் தினகரன் வாக்குறுதி கொடுத்தார் என்று செல்வம் சமூக வலைதளத்தில் பதிவுசெய்துள்ளார். ஆனால் தினகரன், அந்த வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்று வெற்றிவேல் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால்தான், அவதூறு தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று செல்வத்தை எச்சரித்து அனுப்பியுள்ளோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!