15 ஆண்டுகளாக சாலை வசதியின்றித் தவிக்கும் நீலகிரி கிராம மக்கள்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்முதிரக்கொல்லி கிராம மக்கள், கடந்த 15 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டுவருகின்றனர். 

சாலை

நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா பிதேர்காட்டை அடுத்த கீழ்முதிரக்கொல்லி என்ற இடத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். பள்ளி, கல்லுாரி, வேலை என அனைத்து தேவைகளுக்காகவும் அங்கிருந்து முக்கட்டி, பிதேர்காடு, கூடலுார் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பெண்ணை என்ற இடம் வரையிலான சுமார் ஒன்றரை கிலாே மீ்ட்டருக்கு சேறும் சகதியுமாக உள்ள சாலையைத்தான் பயன்படுத்திவருகின்றனர். கடந்த சில மாதங்களாக, கூடலுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், இப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‛‛ கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ராேடு வசதி இல்லாமல் தவித்துவருகிறாேம். பெண்ணையில் இருந்து கீழ்முதிரக்கொல்லி வரையிலான ஒன்றரை கிலாே மீட்டருக்கு தார் ரோடு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தாேம், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தற்பாேதுள்ள கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலானாேர் தினக்கூலிகளாகவும், தாேட்டத் தாெழிலாளர்களாகவும், விவசாயிகளாகவும் உள்ளனர். அன்றாடம் இந்த சேறும் சகதியுமாக உள்ள ரோட்டைத்தான் பயன்படுத்தவேண்டியுள்ளது. பெரும்பாலான மாணவர்கள், பிதிர்காட்டில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். இங்கிருந்து பிதிர்காடு செல்லும் ரோடு மோசமாக உள்ளதால், சுமார் 3 கி.மீ சுற்றி சூசம்பாடி, மேல்முதிரக்கொல்லி வழியாக நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவசரத் தேவைக்கு ஆட்டாே, பைக் உள்ளிட்ட வாகனங்களைக் கூட இந்த ஒன்றரை கி.மீ தூரத்துக்கு இயக்க முடியாத நிலைதான் உள்ளது. தற்பாேது மழைக்காலம் என்பதால், கடுமையான சிரமத்துக்குள்ளாகிவருகிறோம். கீழ்முதிரக்கொல்லியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பாேக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் இந்த ராேட்டை சீரமைக்க, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!