`கருணாநிதி நேற்றைவிட இன்று நலமாக இருக்கிறார்!’ - துரைமுருகன் உற்சாகம் #karunanidhi

'கருணாநிதியின் உடல்நிலை, நேற்றைக்கு இருந்ததைவிட இன்று நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது' என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

துரைமுருகன்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கைவெளியிட்டது. அதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா கலைஞர்களும் கோபாலபுரம் சென்று, மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலைகுறித்து விசாரித்துவருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ''கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவர், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். அவரது உடல்நிலையில் நேற்றைவிட இன்று நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இப்போதுகூட, அவரைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன். நலமாக இருக்கிறார். அவரது உடல்நிலைகுறித்து பரவும் வதந்திகளைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம். எங்களது முகத்தைப் பார்த்தாலே அவருக்கு ஒன்றும் இல்லை என்பது தெரியும். அதனால், ஊடகங்கள் தைரியமாக இங்கிருந்து செல்லலாம்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!