மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் கருணாநிதி: ஆம்புலன்ஸ் வருகை! #Karunanidhi

கோபாலபுரம் வீட்டின் முன்பு தொடர்ந்து தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொண்டர்கள்


கருணாநிதிக்காக காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஐசியூ வார்டு(SICU) தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்.


திமுக தலைவர் கருணாநிதியை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவிருக்கிறார். காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்துள்ளது

காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ்


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அன்பில் மகேஷ், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் தற்போது கோபாலபுரம் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இல்லத்திற்கு தொடர்ந்து  வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

அன்பில் மகேஷ்


தற்போது காவேரி மருத்துவமனை மருத்துவர் குழுவும் அங்கு வந்துள்ளது. திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் தற்போது கோபாலபுரம் வந்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சுமார் 10 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும், தனது இல்லத்துக்குப் புறப்பட்டார். அதன் பின்னர் திமுக நிர்வாகிகள் அங்குக் கூடியிருந்த திமுக தொண்டர்களை கலைந்து செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். ஆனால் சுமார் 100 தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா கலைஞர்களும் கோபாலபுரம் சென்று, மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ''கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரது உடல்நிலைகுறித்து பரவும் வதந்திகளைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம்’ என்றார். 

கருணாநிதி

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!