மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் ஸ்டாலின்! #Karunanidhi#LiveUpdates | Dmk leader karunanithi hospitalised live updates

வெளியிடப்பட்ட நேரம்: 01:29 (28/07/2018)

கடைசி தொடர்பு:04:04 (28/07/2018)

மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் ஸ்டாலின்! #Karunanidhi#LiveUpdates

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். 

ஸ்டாலின்

திருநாவுக்கரசர், உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். 

கருணாநிதியின் இரத்த அழுத்தம் தற்போது சீராகியிருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட பின்னர் திமுக நிர்வாகிகள், மற்றும் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனையில் இருந்து கிளம்பினர். 

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது. இன்று டெல்லியில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக்  சென்னை வரவுள்ளனர். அதன் பின்னர் ராகுல் காந்தி வருவார்’என்றார்.

கருணாநிதியின் இரத்த அழுத்தம் தற்போது சீராகியிருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை

காவேரி மருத்துவமனை அறிக்கை

மருத்துவமனை முன்பு

காவேரி மருத்துவமனை

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  "திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட  ரத்த அழுத்தக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பின்னர் இரத்த அழுத்தம் சீராகிவிட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். விரைவில் மருத்துவக்குழு அறிக்கை வெளியிடும். எனவே தொண்டர்கள் பதற்றமடைய வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்..

ஆ.ராசா

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் 

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமாவளவன்

மு.க.ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோரும் மருத்துவமனைக்கு  வந்தனர்.

stalin

ஆம்புலன்ஸ் காவேரி மருத்துவமனையை வந்தடைந்தது. 

ambulance reached kaveri hospital

காவேரி மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 


கருணாநிதிக்காக காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஐசியூ வார்டு(SICU) தயார் நிலையில் இருப்பதாகத் தகவல்.


திமுக தலைவர் கருணாநிதியை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படவிருக்கிறார். காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்துள்ளது

காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ்


முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அன்பில் மகேஷ், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோர் தற்போது கோபாலபுரம் வருகை தந்துள்ளனர். இவர்களுடன் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இல்லத்திற்கு தொடர்ந்து  வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

அன்பில் மகேஷ்


தற்போது காவேரி மருத்துவமனை மருத்துவர் குழுவும் அங்கு வந்துள்ளது. திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் தற்போது கோபாலபுரம் வந்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சுமார் 10 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் இருக்கும், தனது இல்லத்துக்குப் புறப்பட்டார். அதன் பின்னர் திமுக நிர்வாகிகள் அங்குக் கூடியிருந்த திமுக தொண்டர்களை கலைந்து செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். ஆனால் சுமார் 100 தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது என்று காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா கலைஞர்களும் கோபாலபுரம் சென்று, மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ''கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவரது உடல்நிலைகுறித்து பரவும் வதந்திகளைத் தொண்டர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம்’ என்றார். 

கருணாநிதி