எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் தகவல்

கடலூரை சேர்ந்தவர் எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார். சுதந்திரபோராட்ட வீரரான இவர், நகரின் பல்வேறு
வளர்ச்சி பணிகளுக்காக தனது நிலங்களை தானமாக வழங்கியுள்ளார். அரசு இவரை பெருமைபடுத்தும் வகையில்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இந்நிலையில் 
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, விதி எண் 110ன் கீழ்
அறிவிப்பு வெளியிட்டார்.  அந்த அறிவிப்பில்  சுதந்திர போராட்ட வீரரும், சமூக நீதிக்காக போராடியவருமான
எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளான செப்டம்பர் 16ம் தேதியை அரசு விழாவாக கொண்டாடப்படும்,
அவருக்கு கடலூரில் மணி மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.

கடலூர்

இதனையடுத்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்,  உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு,தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆகிய 4 அமைச்சர்களும் கடலூர் வந்தனர். பின்னர் அவர்கள்
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகில் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தினை பார்வையிட்டனர். அவர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் சி.வி. சண்முகம், ”ராமசாமி படையாச்சியை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து, அவருக்கு கடலூரில் மணி மண்டபம் அமைக்கும் பணியை துவங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடலூரின் மையப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இங்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!